search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)
    X
    கொரோனா தடுப்பூசி (கோப்புப்படம்)

    அமீரகத்தில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை உயர்வு

    அமீரக சுகாதார அமைச்சகத்தின் சார்பில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    அபுதாபி:

    அமீரக சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    அமீரக சுகாதார அமைச்சகத்தின் சார்பில், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடப்படும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய கொரோனா தடுப்பூசி பிரசாரத்தின் மூலம் வசிக்கும் சமூகத்தினரிடையே நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது இதன் நோக்கமாகும். மேலும் பெருந்தொற்றில் இருந்து அனைவரும் மீண்டு நலம் பெற வேண்டும் என்பதே இதன் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து நாட்டின் ஆய்வு முடிவுகளின்படி பைசர் அல்லது அஸ்ட்ராஜெனக்கா தடுப்பூசி மருந்துகள் உறுதியான நோய் எதிர்ப்பு சக்தியை உற்பத்தி செய்வதாக தெரிய வந்துள்ளது. மேலும் முதல் டோஸ் அளிக்கப்பட்டதுமே கொரோனா வைரஸ் தாக்கப்படும் வாய்ப்பு குறைவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

    அமீரகத்தை பொறுத்தவரையில் தடுப்பூசிகள் தட்டுப்பாடு இல்லாமல் முழு வீச்சில் பொதுமக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதில் கடந்த 24 மணி நேரத்தில், 1 லட்சத்து 5 ஆயிரத்து 443 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

    இதன் மூலம் அமீரகத்தில் இதுவரை மொத்தம் 1 கோடியே 10 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்த அளவானது 100 பேருக்கு 102.19 பேர் என்ற விகிதத்தில் உயர்ந்து உள்ளது. தொடர்ந்து அனைவரும் கொரோனா தடுப்பூசியை தானாக முன்வந்து போட்டுக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×