search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    இலங்கையில் தடுப்பூசி போட்ட 3 பேர் பலி - ரத்தம் உறைந்ததால் விபரீதம்

    இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இந்தியா பரிசாக அளித்த கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
    கொழும்பு:

    இலங்கையில் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 29-ந் தேதி தொடங்கியது. இந்தியா பரிசாக அளித்த கொரோனா தடுப்பூசிகளை பயன்படுத்தி, இதுவரை, 9 லட்சத்து 25 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    இவர்களில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்-அஸ்ட்ரா ஜெனேகா கூட்டாக உருவாக்கிய தடுப்பூசியை போட்டுக்கொண்ட 3 பேர் இறந்து விட்டனர். இத்தகவலை இலங்கை சுகாதாரத்துறை மந்திரி பவித்ரா வன்னியரச்சி அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களில் 6 பேருக்கு ரத்த உறைவு பிரச்சினை ஏற்பட்டதாகவும், அவர்களில் 3 பேர் உயிரிழந்து விட்டதாகவும் அவர் கூறினார். ஆனால், ரத்த உறைவுக்கு அந்த தடுப்பூசி காரணம் அல்ல என்று உலக சுகாதார நிறுவனம் கூறியிருப்பதாக அவர் தெரிவித்தார். சீரம் இன்ஸ்டிடியூட்டிடம் கேட்டிருந்த மேலும் 3 லட்சம் தடுப்பூசிகள் அடுத்த மாதம் வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
    Next Story
    ×