search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)
    X
    கொரோனா பரிசோதனை (கோப்புப்படம்)

    புதிதாக 1,399 பேருக்கு கொரோனா- ஓமனில் ஒரே நாளில் 12 பேர் பலி

    ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.
    மஸ்கட்:

    ஓமன் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    ஓமனில் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகளில், நேற்று 1,399 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 81 ஆயிரத்து 430 ஆக உயர்ந்துள்ளது.

    இதில் நேற்று ஒரேநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 1,346 பேர் பூரண குணமடைந்து தங்களது வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக ஓமனில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 670 ஆக அதிகரித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் எண்ணிக்கை 89 சதவீதமாக இருந்து வருகிறது.

    கொரோனா தொற்று காரணமாக நேற்று ஒரே நாளில் ஓமனில் 12 பேர் பலியானார்கள். இதனால் கொரோனாவுக்கு பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 1,890 ஆக அதிகரித்தது. தற்போது ஓமன் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உடல்நலக்குறைவால் 265 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    பொதுமக்கள் வெளியில் செல்லும் போது முககவசம் அணிந்து, சமூக இடைவெளியை முறையாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    Next Story
    ×