search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    வங்காளதேசத்தில் கொரோனா பாதிப்பு 7 லட்சத்தை நெருங்குகிறது

    வங்காளதேசத்தில் கொரோனா தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 890-ஐத் தாண்டியது.
    டாக்கா:

    கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் 13 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் தொற்றுக்கு இதுவரை 29 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்
      
    உலக அளவில் கொரோனா பாதிப்பில் வங்காளதேசம் 33-வது இடத்தில் உள்ளது.

    வங்காளதேசத்திலும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி அந்நாட்டில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 7 லட்சத்தை நெருங்குகிறது.
     
    இந்நிலையில், வங்காளதேசத்தில் நேற்று ஒரே நாளில் 6,028 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அங்கு பாதிப்பு எண்ணிக்கை 6,97,985 ஆக அதிகரித்துள்ளது. மேலும், அங்கு வைரஸ் தாக்குதலுக்கு 69 பேர் பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 891 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவில் இருந்து 5.85 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்தது.
    Next Story
    ×