search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துப்பாக்கி சூடு
    X
    துப்பாக்கி சூடு

    அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கி சூடு -ஒருவர் பலி

    டெக்சாஸ் துப்பாக்கி சூடு தொடர்பாக சந்தேகத்தின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் தனி மனிதர்கள் துப்பாக்கி சூடு நடத்துவதும், இதில் அப்பாவி மக்கள் பலியாவதும் தொடர் கதையாகி வருகிறது. துப்பாக்கி வைத்திருப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க அதிபர் ஜோபைடன் உத்தரவிட்டுள்ளார்.

    இந்த நிலையில், அமெரிக்காவில் டெக்சாஸ் பிரையலில் உள்ள ஒரு தொழில்துறை பூங்காவில் இருந்தவர்கள் மீது நேற்று மதியம் மர்ம மனிதர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். உடனே அங்கு இருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.

    பலர் மீது துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தன. ரத்த வெள்ளத்தில் அவர்கள் கீழே சாய்ந்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்றனர்.

    இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் பலியானார். 5 பேர் படுகாயம் அடைந்தனர். அனைவரும் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் 3 பேர் உடல்நிலை ஆபத்தாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    துப்பாக்கி சூடு நடத்தியவர் தப்பி ஓடிவிட்டார். 2 மணி நேரத்துக்குப் பிறகு சந்தேகத்துக்கு இடமான ஒருவர் போலீசாரிடம் சிக்கினார். அவரிடம் விசாரணை செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×