search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வைரல் புகைப்படம்
    X
    வைரல் புகைப்படம்

    போராட்டக்களத்தில் தேசிய கொடி - வைரலாகும் புகைப்படம்

    பாகிஸ்தான் போராட்டக்களத்தில் ஒரு இயக்கத்தை சேர்ந்தவர்கள் இந்திய தேசிய கொடியை பயன்படுத்தியதாக கூறி புகைப்படம் வைரலாகி வருகிறது.


    இந்தியாவின் தேசிய கொடி ஏந்தி பெரும் கூட்டத்தினர் நிற்கும் புகைப்படம் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக கூறி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படம் பாகிஸ்தானை சேர்ந்த பஷ்தூன் தபுஸ் இயக்கத்தினர் (பிடிஎம்) ஒன்றிணனைந்து இஸ்லாமாபாத் நகரில் நடத்திய போராட்டத்தில் எடுக்கப்பட்டதாக வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    வைரல் புகைப்படம், பிடிஎம் பயங்கரவாதிகள் வெளிப்படையாக இந்திய தேசிய கொடியை அசைக்கின்றனர். அவர்களின் தீய எண்ணம் வெளிப்பட்டுவிட்டது. பஷ்தூன் இந்திய பாம்புகளை நிராகரிக்கிறது எனும் தலைப்பில் பகிரப்பட்டு வருகிறது.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    புகைப்படத்தை ஆய்வு செய்ததில், அது மார்பிங் செய்யப்பட்ட ஒன்று என தெரியவந்துள்ளது. இந்த புகைப்படம் உண்மையில் பாகிஸ்தானில் உள்ள பானு மாவட்டத்தில் எடுக்கப்பட்டது ஆகும். இதில் இருப்பவர்கள் பிடிஎம் இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் நான்கு பாஷ்தூன் இளைஞர்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு கொடி ஏந்தி போராடினர்.

    இதன் உண்மை புகைப்படம் பல்வேறு செய்தி வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் வைரலாகும் புகைப்படம் எடிட் செய்யப்பட்டது என உறுதியாகிவிட்டது.
     
    போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
    Next Story
    ×