என் மலர்

  செய்திகள்

  துப்பாக்கிச்சூடு
  X
  துப்பாக்கிச்சூடு

  அமெரிக்காவில் விருந்து நடந்த வீட்டில் துப்பாக்கி சூடு - 3 பேர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்காவில் விருந்து நடந்த வீட்டில் மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் உயிரிழந்தனர்.
  வாஷிங்டன்:

  அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலத்தில் வில்மிங்டன் நகரில் வீடு ஒன்றில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்று கொண்டிருந்தது. இந்த விருந்தில் 7 பேர் கலந்து கொண்டிருந்தனர். திடீரென அவர்களை நோக்கி மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளனர்.

  இந்த சம்பவத்தில் விருந்தில் பங்கேற்ற 3 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.

  துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தேக நபர்கள் அடையாளம் காணப்படுவார்கள் என தலைமை காவலர் டானி வில்லியம்ஸ் கூறியுள்ளார்.
  Next Story
  ×