search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாதுகாப்பு பணியில் போலீசார்
    X
    பாதுகாப்பு பணியில் போலீசார்

    அமெரிக்க பாராளுமன்ற கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் - காவல் அதிகாரி பலி

    அமெரிக்காவில் பாராளுமன்றம் அமைந்த கேபிடால் கட்டிடத்திற்கு வெளியே காரில் வந்த மர்ம நபர் தாக்குதல் நடத்தியதில் காவல் அதிகாரி ஒருவர் பலியானார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் பாராளுமன்றம் அமைந்துள்ள கேபிடால் கட்டிடத்தின் வெளியே பாதுகாப்பு வளையம் அமைந்த பகுதியில் மர்ம நபர் ஒருவர் நீல நிற செடான் காரை கொண்டு தடுப்பு பகுதியில் மோதியுள்ளார்.  இந்த சம்பவத்தில் 2 அதிகாரிகள் காயமடைந்தனர்.

    இதன்பின் காரில் இருந்து வெளியே குதித்த அதன் ஓட்டுனர் அதிகாரிகளை கத்தியால் குத்தியுள்ளார்.  இதில் அதிகாரி ஒருவர் பலியானார். இதனால் கேபிடால் போலீசார் அந்த நபரை சுட்டுக் கொன்றனர்.

    இந்த தாக்குதல் நடத்திய நபரின் அடையாளம் தெரிய வரவில்லை. அவரது தாக்குதலுக்கான நோக்கம் பற்றிய விவரமும் வெளியிடப்படவில்லை.

    இதுகுறித்து வாஷிங்டன் பெருநகர காவல் துறை உயரதிகாரி ராபர்ட் கன்டீ கூறுகையில், இது பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையது அல்ல என தெரிவித்துள்ளார்.  ஆனால் விசாரணை தொடர்ந்து நடைபெறும் என அவர் கூறியுள்ளார்.

    பாதுகாப்பை கருத்தில் கொண்டு கேபிடால் கட்டிடம் முடக்கப்பட்டு உள்ளது. கட்டிடத்தின் உள்ளே இருந்து யாருக்கும் வெளியே செல்ல அனுமதியில்லை. இதேபோல், கட்டிடத்திற்குள் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×