search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    7-ல் ஒருவருக்குக் 12 வாரங்களுக்கு மேல் நீடித்த கொரோனா பாதிப்பு

    35-49 வயதுடையவர்கள் (25.6 சதவீதத்தினர்) குறைந்தது ஐந்து வாரங்களுக்கு அறிகுறிகளை கொண்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 7-ல்  ஒருவருக்குக் குறைந்தது 12 வாரங்களுக்கு நீடித்த கொரோனா நோய்த்தொற்றின் அறிகுறிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு லாங் கோவிட் என்று பெயரிடப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகளின் பட்டியலில் உடல் சோர்வு, தசை வலி, கவனம் செலுத்துவதில் சிரமம் மற்றும் சுவை மற்றும் வாசனை இழப்பு ஆகியவை அடங்கும். மேலும் இதில் ஆண்களை (12.7 சதவீதம் ) விடப் பெண்களே (14.7 சதவீதம் ) அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

    35-49 வயதுடையவர்கள் (25.6 சதவீதத்தினர்) குறைந்தது ஐந்து வாரங்களுக்கு அறிகுறிகளை கொண்டிருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தேசிய  சுகாதார பகுப்பாய்வு மற்றும் வாழ்க்கை நிகழ்வுகளின் தலைவரான பென் ஹம்பர்ஸ்டோன் கூறுகையில் தற்பொழுது அதிகரித்து வரும் லாங் கோவிடை இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லை. மேலும் இனி வரும் காலங்களில் ஆராய்ச்சிகள் மேற்கொண்டு விரைவில் அதற்கான தீர்வுகள் கண்டறியப்படும் என கூறினார்.

    கொரோனா நோய்த் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் ஒன்றான இங்கிலாந்தில், கிட்டத்தட்ட 1,27,000 இறப்புகளையும் 43,50,266 புதிதாகப் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கைகளையும் பதிவு செய்துள்ளது.இருப்பினும், வலுவான தடுப்பூசி திட்டத்தினால் தினசரி இறப்பு மற்றும் பாதிப்பு எண்ணிக்கை சீராக குறைந்துள்ளது.
    Next Story
    ×