search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    வேகமெடுக்கும் வைரஸ் பரவல் - துருக்கியில் ஒரே நாளில் 37 ஆயிரம் பேருக்கு கொரோனா

    துருக்கியில் கொரோனா தொற்றின் மொத்த பாதிப்பு 32 லட்சத்து 77 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் மொத்த உயிரிழப்பு 31 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது
    அங்காரா:

    துருக்கியில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் ஜெட் வேகத்தில் பரவிவருகிறது. அந்த வகையில் கடந்த நவம்பர் மாதத்துக்கு பிறகு முதல் முறையாக நேற்று ஒரே நாளில் 37 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

    இதுகுறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘கடந்த 24 மணி நேரத்தில் 37 ஆயிரத்து 303 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 32 லட்சத்து 77 ஆயிரத்து 880 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் நேற்று ஒரே நாளில் 155 பேர் கொரோனாவுக்கு பலியானது மூலம் மொத்த உயிரிழப்பு 31 ஆயிரத்து 385 ஆக அதிகரித்துள்ளது’’ என கூறப்பட்டுள்ளது.

    இதனிடையே நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதால் வாரநாட்களில் இரவு ஊரடங்கும், வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படுவதாக அதிபர் எர்டோகன் அறிவித்துள்ளார்.
    Next Story
    ×