search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமலா ஹாரிஸ்
    X
    கமலா ஹாரிஸ்

    அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் ஹோலி பண்டிகை வாழ்த்து

    அமெரிக்காவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இந்திய மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    வண்ணங்களின் பண்டிகையான ஹோலி பண்டிகை உலகம் முழுவதும் உள்ள இந்துக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தீமையை நன்மை வெற்றி கொண்டதன் நினைவாக கொண்டாடப்படும் இந்த பண்டிகையின்போது மக்கள் ஒருவர் மீதொருவர் வண்ணப்பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகின்றனர்.

    இந்த ஆண்டுக்கான ஹோலி பண்டிகை இன்று (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. நேற்று ஹோலிகா தகான் கொண்டாட்டங்கள் நடந்தன.

    இந்நிலையில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் இந்திய மக்களுக்கு ஹோலி பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார். 

    இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், “இனிய ஹோலிபண்டிகை வாழ்த்துக்கள்! நண்பர்கள் மற்றும் அன்புக்குரியவர்கள் மீது வீசப்படும் துடிப்பான வண்ணங்களுக்கு ஹோலி மிகவும் பிரபலமானது. மகிழ்ச்சி நிறைந்த ஹோலி என்பது எங்கள் வேறுபாடுகளை ஒதுக்கி வைப்பது மற்றும் ஒன்றாக இணைத்திருப்பது பற்றிய நேர்மறை எண்ணங்களை கொண்டது. இந்த கடினமான காலங்கள் உலகெங்கிலும் உள்ள சமூகங்களால் உருவான ஒரு செய்தி” என்று பதிவிட்டுள்ளார். 
    Next Story
    ×