search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு சீனா எச்சரிக்கை

    அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தைவானுக்கு ஆதரவாக இருந்து வந்தது.
    வாஷிங்டன்:

    சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டு போருக்கு பிறகு தீவு நாடான தைவான் உருவானது. ஆனாலும் தைவான், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதி என்றும், தேவைப்பட்டால் தைவானை கைப்பற்ற படை பலத்தை பயன்படுத்த தயங்க மாட்டோம் என்றும் சீன அரசு கூறி வருகிறது.

    இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் தைவானுக்கு ஆதரவாக இருந்து வந்தது. சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி தைவானுக்கு அமெரிக்கா ராணுவ ஆயுதங்களை விற்பனை செய்து வந்தது.‌

    இந்த நிலையில் அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவி ஏற்றுள்ளார்.‌ அவர் தைவான் விவகாரத்தில் முந்தைய நிர்வாகத்தின் அதே கொள்கையை கடைபிடித்து வருகிறார்.

    இதனை கண்டித்துள்ள சீனா, தைவானுக்கு ஆதரவு காட்டும் முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆபத்தான கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்துக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதுகுறித்து சீன வெளியுறவு மந்திரி வாங் யி கூறுகையில், “தைவான் பிரச்சினையில் சீன அரசு சமரசம் அல்லது சலுகைகளுக்கு இடமளிக்காது. தைவான் பிரச்சினையின் ஆழத்தை முழுமையாக புரிந்துகொள்ள அமெரிக்காவின் புதிய நிர்வாகத்தை கேட்டுக்கொள்கிறோம். மேலும் நெருப்புடன் விளையாடும் முந்தைய நிர்வாகத்தின் அபாயகரமான கொள்கைகளை முற்றிலும் மாற்றியமைக்க வேண்டும்” என கூறினார்.
    Next Story
    ×