search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    பிரான்சில் மேலும் 23,306 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தொற்றால் பிரான்சில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 88 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
    பாரிஸ்:

    கொரோனா வைரஸ் தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், இரண்டாம் இடத்தில் இந்தியாவும், மூன்றாவது இடத்தில் பிரேசிலும் உள்ளன.

    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் பிரான்ஸ் தற்போது 6-வது இடத்தில் நீடிக்கிறது.

    இந்நிலையில், பிரான்சில் ஒரே நாளில் 23,306 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதனால் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 38.82 லட்சத்தைக் கடந்துள்ளது.

    மேலும், கொரோனாவால் ஒரே நாளில் 170 பேர் பலியான நிலையில், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 88,444 ஆக உயர்ந்துள்ளது.

    கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இதுவரை 2.64 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர். தற்போது 35.29 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×