search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்மா ஒலி
    X
    சர்மா ஒலி

    நேபாள பிரதமர் பதவியில் இருந்து என்னை நீக்க முடியுமா?- சர்மா ஒலி சவால்

    நேபாள பிரதமர் ஒலி, நான் இன்னும் பாராளுமன்ற ஆளும் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் இருக்கிறேன். பிரசாந்தி தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்டு கட்சி என்னை பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்று சவால் விட்டுள்ளார்.

    காத்மண்டு:

    பிரசாந்தா தலைமையிலான கம்யூனிஸ்டு கட்சி நேபாளத்தில் ஆட்சியை பிடித்தது. சர்மா ஒலி அந்த நாட்டின் பிரதமர் ஆனார்.

    இந்தநிலையில் ஆளும் கம்யூனிஸ்டு கட்சியில் பிளவு ஏற்பட்டது. இதையடுத்து அந்தநாட்டு பிரதமர் சர்மா ஒலி பிளவுபட்ட கம்யூனிஸ்டு கட்சி சார்பில் பிரதமராக நீடித்தார். அவரை கட்சியை விட்டு நீக்கியதாக ஆளும் கட்சி அறிவித்தது.

    இதையடுத்து நேபாள நாட்டின் தலைமை நீதிபதி சோலேந்திர ‌ஷம்‌ஷந் தலைமையிலான 5 பேர் கொண்ட அரசியல் அமைப்பு பெஞ்சு கடந்த வாரம் 275 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தை கலைக்க உத்தரவிட்டது. அந்த நாட்டின் பிரதமராக இருந்த ஒலியின் பதவி நீடிப்பையும் ரத்து செய்தது.

    இந்த நிலையில் நேபாள பிரதமர் ஓலி, நான் இன்னும் பாராளுமன்ற ஆளும் கட்சியின் தலைவராகவும் பிரதமராகவும் இருக்கிறேன். பிரசாந்தி தலைமையிலான ஆளும் கம்யூனிஸ்டு கட்சி என்னை பதவியில் இருந்து நீக்க முடியுமா? என்று சவால் விட்டுள்ளார்.

    நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி என்னை பதவி நீக்கம் செய்து பாருங்கள் என்று அவரது சொந்த மாவட்டமான ஜாபாவில் நடந்த நிகழ்ச்சியில் நேபாள பிரதமர் ஓலி சவால் விட்டுள்ளது அந்த நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×