search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    மெக்சிகோவில் துப்பாக்கி சூட்டில் 10 பேர் பலி

    மெக்சிகோவில் மர்ம நபர்கள் நிகழ்த்திய துப்பாக்கி சூட்டில் 10 பேர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர்
    மெக்சிகோ சிட்டி:

    மெக்சிகோ நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள ஜலிஸ்கோ மாகாணம் நாட்டிலேயே அதிக அளவு வன்முறை சம்பவங்கள் நிகழும் மாகாணமாக இருந்து வருகிறது. சமீபத்திய ஆண்டுகளில் வேறு எந்த மாகாணத்திலும் இல்லாத அளவுக்கு இங்கு ரகசிய புதைகுழிகளில் இருந்து ஏராளமான உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

    தொழில் போட்டி காரணமாக போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் அடிக்கடி மோதிக் கொள்வதால் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் நிகழ்கின்றன.

    இந்தநிலையில் ஜலிஸ்கோவின் வடக்கு பகுதியில் உள்ள குவாடலஜாரா நகரில் உள்ள ஒரு வீட்டின் முன்பு 10 ஆண்கள் நின்று பேசி கொண்டிருந்தனர்.‌ அப்போது காரில் வந்து இறங்கிய மர்ம நபர்கள் வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர்.‌ இதில் அவர்கள் 10 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தனர்.‌ மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் அந்த வீட்டினுள் இருந்த ஒரு பெண் மற்றும் 2 சிறுவர்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதனிடையே இந்த தாக்குதல் குறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் கொலையாளிகள் காரில் ஏறி தப்பிச் சென்றனர். போலீசார் படுகாயம் அடைந்த பெண் மற்றும் 2 சிறுவர்களை வீட்டில் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தாக்குதல் நடத்திய நபர்கள் யார் தாக்குதலின் பின்னணி என்ன என்பது உடனடியாக தெரியவராத நிலையில் போலீசார் இதுகுறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
    Next Story
    ×