search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோவாக்சின் தடுப்பூசி மருந்து
    X
    கோவாக்சின் தடுப்பூசி மருந்து

    கோவாக்சின் தடுப்பூசி மருந்தை கொள்முதல் செய்கிறது பிரேசில்

    இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து கொரோனா தடுப்பூசி மருந்துகளை வாங்க பிரேசில் ஒப்பந்தம் செய்துள்ளது.
    பிரேசிலியா:

    கொரோனா வைரசால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பிரேசில் நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் தடுப்பூசி மருந்துகளை வாங்கும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    அவ்வகையில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 20 மில்லியன் டோஸ் கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளை வாங்க பிரேசில் அரசு நேற்று ஒப்பந்தம் செய்துள்ளது. மார்ச் மாதத்தில் இருந்து மே மாதத்திற்குள் இந்த மருந்துகளை டெலிவரி செய்ய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் 8 மில்லியன் டோஸ் மந்துகள் மார்ச் மாதத்தில் டெலிவரி செய்யப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகவலை பிரேசில் சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது.

    உலக அளவில் கொரோனா வைரசால் அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை 10,393,886 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 2,51,661 நபர்கள் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். தினசரி 1500க்கும் மேற்பட்டோர் பலியாகின்றனர். தினசரி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதி செய்யப்படுகிறது. 
    Next Story
    ×