search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தென் ஆப்பிரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா - 15 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு

    தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டோர் எண்ணிக்கை 15 லட்சத்தைத் தாண்டியுள்ளது.
    கேப் டவுன்:

    சீனாவின் வுகான் நகரில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பரில் உருவான கொரோனா வைரஸ் உருமாறி வருகிறது.

    இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் உருமாறிய வைரஸ் பரவல்களை பற்றிய தகவல்கள் வெளிவந்தன.

    தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதையடுத்து அங்கு தடுப்பு மருந்தை செலுத்தும் பணியை அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளது. ஆனாலும் உருமாறிய கொரோனா வைரஸ் அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

    உலக அளவில் கொரோனா பாதிப்பில் தென் ஆப்பிரிக்கா தற்போது 16-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 15,00,677 ஆக உயர்ந்துள்ளது.  

    கொரோனா தொற்று பாதிப்பால் அங்கு பலி எண்ணிக்கை 48 ஆயிரத்து 859 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 14 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
    Next Story
    ×