search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிகிச்சையை விளக்கும் டாக்டர்
    X
    சிகிச்சையை விளக்கும் டாக்டர்

    இங்கிலாந்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41 லட்சத்தை நெருங்கியது

    இங்கிலாந்தில் மேலும் 12,027 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
    லண்டன்:

    இங்கிலாந்தில் உருமாறிய புதிய வகை கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. கொரோனா வைரசுக்கு எதிராக பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி போடும் பணி ஒரு பக்கம் நடந்தாலும் உருமாறிய கொரோனா வைரஸ், அந்நாட்டுக்கு பெரும் தலைவலியாக அமைந்துள்ளது.

    உலக அளவில் கொரோனா பாதிப்பில் பிரிட்டன் தற்போது 5-வது இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 12,027 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். இதையடுத்து அங்கு கொரோனா தொற்றால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 40,95,269 ஆக உயர்ந்துள்ளது.  

    கொரோனா தொற்று பாதிப்பால் 533 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து அங்கு பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 920 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றில் இருந்து 23.31 லட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
    Next Story
    ×