search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    இத்தாலியை விடாத கொரோனா - 95 ஆயிரத்தை தாண்டியது பலி எண்ணிக்கை

    இத்தாலி நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்தை கடந்தது.
    ரோம்:

    கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

    அமெரிக்காவை தொடர்ந்து இந்தியா இரண்டாம் இடத்திலும், பிரேசில் 3-ம் இடத்திலும் உள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள பட்டியலில் இத்தாலி 8-ம் இடத்தில் உள்ளது.

    இந்நிலையில், இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 15 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அங்கு கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 27 லட்சத்து 80 ஆயிரத்து 882 ஆக உள்ளது.

    ஒரே நாளில் 348 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அங்கு கொரோனா வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 95 ஆயிரத்து 235 ஆக உள்ளது. 

    மேலும், கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 23 லட்சத்தை கடந்துள்ளது. சுமார் 3.82 லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    Next Story
    ×