search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விமானத்தில் இருந்து மருந்தை இறக்கும் காட்சி
    X
    விமானத்தில் இருந்து மருந்தை இறக்கும் காட்சி

    இந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்தது

    இந்தியா அனுப்பிய 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து ஆப்கானிஸ்தான் சென்றடைந்ததாகவும், நட்பு நாடுகளுக்கு இந்தியா எப்போதும் துணை நிற்கும் என்றும் வெளியுறவுத்துறை மந்திரி கூறி உள்ளார்.
    புதுடெல்லி:

    இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகள் மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இதன்படி பூடான், மாலத்தீவு நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது.

    அவ்வகையில், ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு இன்று 5 லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்து அனுப்பி வைக்கப்பட்டது. மும்பையில் இருந்து ஏர் இந்தியா விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்ட மருந்து காபூல் சென்றடைந்தது. இத்தகவலை டுவிட்டர் மூலம் பகிர்ந்துள்ளார் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர். எப்போதும் நமது நட்பு நாடுகளுக்கு துணை நிற்போம் என்றும் அவர் கூறி உள்ளார்.
    Next Story
    ×