search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்கா
    X
    அமெரிக்கா

    அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா விரைந்து இணைய வேண்டும் - ஈரான் மந்திரி வலியுறுத்தல்

    அணுசக்தி ஒப்பந்தத்தில் அமெரிக்கா விரைந்து இணைய வேண்டும் என ஈரான் மந்திரி வலியுறுத்தியுள்ளார்.
    டெஹ்ரான்:

    அமெரிக்கா, ஈரான் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த 2015-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில், தங்களது அணுசக்தி திட்டங்கள் அணு ஆயுதம் தயாரிப்பதற்கானவை இல்லை என்பதை உறுதி செய்ய ஈரான் ஒப்புக் கொண்டது. அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீதான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்த வல்லரசு நாடுகள் ஒப்புக்கொண்டன.

    அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்ற பிறகு அந்த ஒப்பந்தத்திலிருந்து விலகுவதாக கடந்த 2018-ம் ஆண்டு அறிவித்தாா். மேலும், ஒப்பந்தம் காரணமாக விலக்கப்பட்டிருந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்தினாா். இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நீடித்து வருகிறது.

    இதற்கிடையே, தற்போது அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகம் போய் ஜோ பைடன் நிர்வாகம் ஆட்சி அதிகாரத்துக்கு வந்துள்ளது. ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு இணங்கி நடந்தால் அமெரிக்கா மீண்டும் அந்த ஒப்பந்தத்தில் இணையும் என்று ஜோ பைடனின் நிர்வாகம் அண்மையில் அறிவித்தது.

    இந்த சூழலில் அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ் உள்ள கடமைகளுடன் ஈரான் மீண்டும் இணங்கி நடந்தால் ஒரு நீண்ட மற்றும் வலுவான ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா இறங்கி வரும் என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் ஜென் சாகி கூறினார்.

    இந்நிலையில், 2015- அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா விரைந்து செயலாற்ற வேண்டும் என ஈரான் வெளியுறவுத் துறை மந்திரி வலியுறுத்தியுள்ளார்.

    வரும் 21-ம் தேதிக்குள் அமெரிக்கா பொருளாதார தடைகளை தளர்த்தாவிடில் , ஈரான் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேறியதையும் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சுட்டிக்காட்டியுள்ளார்.
    Next Story
    ×