search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ்
    X
    ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ்

    சிக்கிமில் இந்திய-சீன ராணுவம் மோதல் : பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க முடியும் - ஐ.நா. பொதுச்செயலாளர் நம்பிக்கை

    சிக்கிமில் இந்திய-சீன ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், பேச்சுவார்த்தை மூலம் பதற்றத்தை தணிக்க முடியும் என்று ஐ.நா. பொதுச்செயலாளர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    நியூயார்க்:

    கிழக்கு லடாக்கை தொடர்ந்து, சிக்கிம் மாநிலத்திலும் சீன ராணுவ வீரர்கள் கடந்த வாரம் அத்துமீறலில் ஈடுபட்டனர். அங்குள்ள நாது லா எல்லை பகுதி வழியாக வந்த அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

    இதைத்தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையே சண்டை நடந்தது. உடனே, உள்ளூர் ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்று பிரச்சினை முடிவுக்கு வந்தது.

    இந்தநிலையில், இதுகுறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்ரஸ் என்ன கருதுகிறார்? என்று அவருடைய செய்தித்தொடர்பாளர் ஸ்டெபானி துஜாரிக்கிடம் நிருபர்கள் கேட்டனர்.

    அதற்கு அவர் கூறியதாவது:-

    எல்லைப்பகுதியில் நிலவ வாய்ப்புள்ள பதற்றத்தை பேச்சுவார்த்தை மூலம் தணிக்க முடியும் என்று நாங்கள்நம்புகிறோம்.

    இதுதான் நாங்கள் தெரிவிக்க விரும்பும் கருத்து.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×