என் மலர்

  செய்திகள்

  கோப்புபடம்
  X
  கோப்புபடம்

  மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் - ஹாங்காங்கில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஹாங்காங்கில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

  ஹாங்காங்:

  ஹாங்காங் நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அங்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வைரஸ் பரவலை கட்டுப்படுத்தினர். அதன்பின் சில மாதங்களில் கட்டுப்பாடுகள் தளர்த்தப் பட்டு இயல்பு நிலை திரும்பியது.

  இந்த நிலையில் ஹாங்காங்கில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து ஹாங்காங்கில் 2 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது.

  இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நகரில் 16 கட்டிடங்களை உள்ளடக்கிய பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பரிசோதனை செய்து முடிவுகள் வரும் வரை வீடுகளை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

  தொற்று நோயில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கு பரிசோதனை முடிவு கிடைக்கும்வரை மக்கள் வெளியில் வர அனுமதிக்கப்படமாட்டார்கள். வைரஸ் பரவல் உள்ள பகுதிகளில் மக்கள் கட்டாயமாக பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

  கடந்த நவம்பர் மாதத்துக்கு பிறகு தற்போது புதிதாக கொரோனா வைரஸ் பரவல் அலை ஹாங்காங்கில் ஏற்பட்டு இருக்கிறது. கடந்த 2 மாதங்களில் 4,300-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஹாங்காங் நகரில் 40 சதவீதம் பேர் தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர்.

  அதேபோல் யா பீசிம் மொங் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதை அடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாங்காங்கில் நேற்று புதிதாக 81 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

  Next Story
  ×