search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பைடன்
    X
    ஜோ பைடன்

    நிர்வாக நடவடிக்கைகளில் பைடன் சாதனை... முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டம் தயார்

    அமெரிக்க அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், அதிவேகமாக தனது நிர்வாக நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், பதவியேற்ற முதல் நாளிலேயே, முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை அதிரடியாக மாற்றினார். 

    பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தில் மீண்டும் இணைதல், அமெரிக்க-மெக்சிகோ எல்லைச் சுவர் கட்டுமானம் நிறுத்தம், அமெரிக்கா-கனடா இடையிலான எரிவாயு இணைப்பு திட்டமான, கீஸ்டோன் எக்ஸ்.எல். பைப்லைன் திட்டம் ரத்து, உலக சுகாதார அமைப்பில் மீண்டும் இணைதல், பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம் உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார். 2வது நாளில் இரண்டு உத்தரவுகளில் கையெழுத்திட்டார். இந்த அதிரடி நடவடிக்கை தொடர்கிறது.

    அமெரிக்க அதிபர்களின் முதல் 100 நாள் செயல்திட்டங்கள்

    ஜோ பைடன் ஒரு தூங்கும் பேர்வழி எனவும், அதிபர் பதவியை நிர்வகிப்பதற்கான ஆற்றல் அவரிடம் இல்லை என்றும் டிரம்ப் தனது பிரசாரத்தின்போது விமர்சனம் செய்தார். ஆனால், அவரது கருத்தை தகர்த்தெறிந்த பைடன், 78 வயதிலும் மிகவும் சுறுசுறுப்பாக இயங்குகிறார். பதவியேற்ற இரண்டு நாட்களில் எந்த அதிபரும் செய்யாத அளவில் அதிகபட்சமாக 17 உத்தரவுகளில் கையெழுத்திட்டு ஆச்சரியப்பட வைத்துள்ளார். டிரம்ப் கிட்டத்தட்ட 2 மாதங்களில் செயல்படுத்திய திட்டங்களை பைடன் இரண்டே நாட்களில் முடித்துள்ளார். 

    இதே வேகத்தில் அவர் பயணித்தால், முந்தைய அதிபர்களின் முதல் 100 நாட்கள் சாதனைகளை குறைந்த நாட்களிலேயே முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பைடனின் முதல் 100 நாட்களுக்கான செயல்திட்டங்களை இறுதி செய்யும் பணியில் அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளனர். 

    ஜோ பைடன் நிறைவேற்ற விரும்பும் திட்டங்களில், பெரும்பாலானவை நிறைவேற்று உத்தரவு அல்லது மத்திய அமைப்புகளுக்கான உத்தரவு மூலம் நிறைவேற்றப்படலாம். 
    Next Story
    ×