search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சரண் தான் வரைந்த மோடியின் ஓவியத்தை துபாய்க்கு வருகை தந்த மத்திய இணை மந்திரியிடம் வழங்கியபோது எடுத்த படம்.
    X
    சரண் தான் வரைந்த மோடியின் ஓவியத்தை துபாய்க்கு வருகை தந்த மத்திய இணை மந்திரியிடம் வழங்கியபோது எடுத்த படம்.

    பிரதமர் மோடியின் ஓவியத்தை வரைந்து மத்திய மந்திரிக்கு பரிசளித்த சிறுவன்

    இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, 14 வயது சிறுவன் ஒருவன் தான் வரைந்த மோடியின் ஓவியத்தை துபாய்க்கு வருகை தந்த மத்திய இணை மந்திரி முரளிதரனுக்கு பரிசாக வழங்கினார்.
    துபாய்:

    துபாயில் வசித்து வருபவர் சசிகுமார், அவரது மனைவி பிந்து. இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்த இவர்கள் சரண் என்ற 14 வயது மகனுடன் துபாயில் வசித்து வருகின்றனர். சரண் இங்குள்ள நியூ இந்தியன் மடல் பள்ளிக்கூடத்தில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் திறமையுடைய இந்த சிறுவனை பெற்றோர்கள் ஊக்கமளித்துள்ளனர்.

    அமீரக தலைவர்கள் உள்பட பல்வேறு உருவங்களை அச்சு அசலாக வரையும் திறமை பெற்ற இந்த சிறுவன், வரும் குடியரசு தினத்திற்காக பிரதமர் நரேந்திர மோடியின் உருவத்தை போர்ட்ரைட் எனப்படும் ஓவியமாக வரைந்துள்ளார்.

    மொத்தம் 60 செ.மீ. உயரம், 90 செ.மீ. அகலமுடைய இந்த ஓவியத்தை, மத்திய தொழில் பாதுகாப்பு படையின் (சி.ஐ.எஸ்.எப்.) 50-ம் ஆண்டு கொண்டாட்டத்தில் வட்ட தொப்பியை அணிந்தபடி பிரதமர் மோடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்ட புகைப்படத்தை அடிப்படையாக வைத்து அந்த சிறுவன் வரைந்துள்ளார்.

    இதில் நேற்று முன்தினம் துபாய்க்கு வருகை புரிந்த மத்திய வெளியுறவு இணை மந்திரி முரளிதரனை அந்த சிறுவன் சரண் பெற்றோர்களுடன் சென்று சந்தித்தார். அப்போது தான் கொண்டு சென்ற மோடியின் ஓவியத்தை மத்திய மந்திரிக்கு பரிசளித்தார்.

    ஓவியத்தை பெற்றுக்கொண்டு பாராட்டு தெரிவித்த மத்திய மந்திரி தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியை குறிப்பிட்டு, ‘‘6 அடுக்கில் வரையப்பட்ட ஓவியம், குடியரசு தின பரிசு, உண்மையில் கவரக்கூடியது’’ என குறிப்பிட்டுள்ளார்.

    இதனை அடுத்து அந்த சிறுவனும் பெற்றோர்களும் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×