search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிபர் ஜோ பைடன்
    X
    அதிபர் ஜோ பைடன்

    அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு மாஸ்க் அணியவேண்டும் - ஜோ பைடன் வேண்டுகோள்

    கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ பைடன் நேற்று பதவியேற்றார். வெள்ளை மாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார்.

    அதிபராக பதவியேற்ற முதல் நாளிலேயே முந்தைய அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த சில கொள்கை முடிவுகளை மாற்றியமைத்துள்ளார்.

    கொரோனா நெருக்கடி, குடியேற்றம், இனவாத பிரச்சினை உள்ளிட்ட 15 முக்கிய உத்தரவுகளில் கையெழுத்திட்டார் பைடன்.  

    கொரோனா நோய்த்தடுப்பு விஷயத்தில் மத்திய அரசின் நடவடிக்கையை அதிகரிப்பது தொடர்பான உத்தரவில் முதலில் கையெழுத்திட்டார்.

    இந்நிலையில், கொரோனா வைரசால் ஏற்படும் உயிரிழப்பைத் தடுக்க அடுத்த 100 நாட்களுக்கு அனைவரும் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக, அதிபர் பைடன் வெளியிட்டுள்ள அறிக்கையில், இன்று முதல் ஏப்ரல் மாதம் வரை அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என வல்லுநர்கள் அறிவுறுத்தி உள்ளனர். இதன்மூலம் குறைந்தது 50 ஆயிரம் பேரின் உயிரை காப்பாற்ற முடியும். எனவே, அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். 
    Next Story
    ×