search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பைடன்
    X
    ஜோ பைடன்

    ஆவணமற்ற புலம்பெயர்ந்தோருக்கு நல்ல செய்தி... புதிய மசோதா தாக்கல் செய்ய ஜோ பைடன் திட்டம்

    ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை ஜோ பைடன் மேற்கொள்ள உள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் 46வது அதிபராக பதவியேற்றுள்ள ஜோ பைடன், வெள்ளைமாளிகையில் உள்ள ஓவல் அலுவலகத்தில் தனது பணிகளை தொடங்கினார். அதிபராக பதவியேற்ற சில மணி நேரங்களில், பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தில் அமெரிக்கா மீண்டும் இணையும் என அதிபர் ஜோ பைடன் அறிவித்தார். மேலும், இதுதொடர்பான உத்தரவிலும் அவர் கையெழுத்திட்டுள்ளார்.

    இந்நிலையில், அமெரிக்காவில் வாழும் சுமார் 11 மில்லியன் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் எளிதாக குடியுரிமை பெறுவதற்கான நடவடிக்கையை ஜோ பைடன் மேற்கொள்வார் என தகவல் வெளியாகி உள்ளது. குடியுரிமைக்கான பாதையை எளிதாக்கும் சட்ட மசோதாவை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளார்.

    சட்டவிரோதமாக தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தோரை நாடு கடத்தும் திட்டம் 100 நாட்கள் நிறுத்தி வைக்கப்படும் என பைடன் வாக்குறுதி அளித்துள்ளார். அதே நேரத்தில் முன்மொழியப்படும் மசோதாவானது, அமெரிக்காவை புலம்பெயர்ந்தோர் தேசமாக அங்கீகரிக்கும். அத்துடன், புலம்பெயர்ந்தோரை குறிப்பிடும் ‘அன்னியர்‘ என்ற வார்த்தை, ‘குடிமகன் அல்லாதோர்’ என்று மாற்றப்படும்.

    புலம்பெயர்ந்தோரின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வரும் ஆர்வலர்கள், பைடனின் இந்த திட்டத்தை வரவேற்றுள்ளனர்.
    Next Story
    ×