search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பைடன், கமலா ஹாரிஸ்
    X
    ஜோ பைடன், கமலா ஹாரிஸ்

    நாடாளுமன்றம் வளாகம் வந்தடைந்தனர் ஜோ பைடன், கமலா ஹாரிஸ்: பதவி ஏற்பு விழாவில் மைக் பென்ஸ்

    அமெரிக்கா அதிபராக பதவி ஏற்க இருக்கும் ஜோ பைடன் தனது மனைவியுடன் இணைந்து நாடாளுமன்ற வளாகம் வந்தடைந்தார்.
    அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம்தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.

    இந்திய நேரப்படி இன்று இரவு 10.30 மணி அளவில் ஜோ பைடன் அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். இதற்கான விழா நடைபெற்று வருகிறது. வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறிய டிரம்ப், ஜோ பைடன் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளமாட்டேன் என தெரிவித்துவிட்டார்.

    மைக் பென்ஸ்

    ஆனால் விழாவிற்கு துணை அதிபராக இருக்கும் மைக் பென்ஸ் தனது மனைவியுடன் வருகை தந்துள்ளார். ஜோ பைடன் பதவி ஏற்றதும் மைக் பென்ஸ் முன்னாள் துணை அதிபராகிவிடுவார். அதன்பின் கமலா ஹாரிஸ் துணை அதிபராக பதவி ஏற்பார்.  இவர் தனது கணவருடன் வந்துள்ளார்.

    பில் கிளின்டன், ஹிலாரி

    முன்னாள் அதிபர் பில் கிளின்டன் அவரது மனைவி ஹிலாரி கிளின்டனும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டனர். ஜோ பைடன் தனது மனைவியுடனும், கமலா ஹாரிஸ் தனது கணவருடனும் நாடாளுமன்றம் வந்தடைந்தனர்.
    Next Story
    ×