search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அமெரிக்க அதிபராக இறுதி பயணம் மேற்கொள்ளும் டிரம்ப்
    X
    அமெரிக்க அதிபராக இறுதி பயணம் மேற்கொள்ளும் டிரம்ப்

    அமெரிக்க அதிபராக இறுதி பயணத்தை தொடங்கினார் டொனால்டு டிரம்ப்

    அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் புளோரிடாவுக்கு பயணம் மேற்கொண்டார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்கா அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார். தற்போதைய அதிபரான டொனால்டு டிரம்ப் மற்றும் துணை அதிபரான மைக் பென்ஸ் தோல்வியடைந்தனர்.

    அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன், துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் இன்று பதவியேற்க உள்ளனர். அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. இதனால், இன்றுடன் டொனால்டு டிரம்பின் பதவிகாலம் முடிவடைகிறது.

    பதவிகாலம் முடிவடைய உள்ள நிலையில், டொனால்டு டிரம்ப் இன்று வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறினார். அவர் வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறி மெரிலேண்ட் பகுதியில் உள்ள ராணுவ தளத்தில் நடைபெற்ற பிரிவு உபசார நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதன் பின்னர் டொனால்டு டிரம்ப் புளோரிடாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

    புளோரிடாவில் உள்ள மார்-ஏ-லஹொ  என்ற தனது பிரம்மாண்டமான பண்ணைவீட்டில் குடும்பத்தினருடன் டிரம்ப் குடியேற உள்ளார். புளோரிடா கடற்கரையோரம் அமைந்துள்ள அந்த பிரம்மாண்ட பண்ணைவீட்டில் தங்க உள்ள டொனால்டு டிரம்ப் தன்னுடன் வெள்ளைமாளிகையில் பணிபுரிந்த சிலரையும் பண்ணைவீட்டில் பணிக்கு அழைத்து செல்ல உள்ளதாக
    தகவல் வெளியாகியுள்ளது.

    இந்நிலையில், வாஷிங்டனை விட்டு வெளியேறியுள்ள டொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் என்ற பதவியுடன் இறுதியாக விமான பயணம் மேற்கொண்டுள்ளார்.
    Next Story
    ×