search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பைடன்
    X
    ஜோ பைடன்

    அதிபராக பதவியேற்கும் இன்றே டிரம்பின் உத்தரவுகளை மாற்றி ஜோ பைடன் எடுக்கும் சில முக்கிய முடிவுகள்...

    அமெரிக்க அதிபராக ஜோ பைடன் இன்று பதவியேற்க உள்ளார். இந்திய நேரப்படி இன்று இரவு 10 மணியளவில் ஜோ பைடன் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ம் தேதி நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்று, அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை அதிபராக தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் வெற்றிபெற்றார்.

    அமெரிக்க அதிபராக ஜோ பைடனும், துணை அதிபராக கமலா ஹாரிசும் இன்று பதவியேற்க உள்ளனர். அமெரிக்க பாராளுமன்றத்தில் இந்திய நேரப்படி இரவு 10 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதும் உடனடியாக முதல்நாளே டொனால்டு டிரம்ப் எடுத்த சில முடிவுகளை மாற்றியமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பதவியேற்ற முதல்நாளே ஜோ பைடன் மாற்றியமைக்கும் முடிவுகள் குறித்த விவரத்தை காண்போம்...

    * டிரம்ப் அதிபராக இருந்தபோது உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகியது. ஜோ பைடன் அதிபரான உடன் உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைய உள்ளது.

    * டிரம்ப் அதிபராக இருந்தபோது அமெரிக்காவில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்படவில்லை. ஜோ பைடன் அதிபரான உடன் அமெரிக்காவில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட உள்ளது. அமெரிக்கர்கள் 100 நாட்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற திட்டத்தை ஜோ பைடன் தொடங்கி வைக்கிறார்.

    * கல்வி கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.
     
     * டிரம்ப் அதிபராக இருந்தபோது பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா விலகியது. ஜோ பைடன் அதிபரான உடன் பாரிஸ் பருவநிலை மாற்ற உடன்படிக்கையில் அமெரிக்கா சேர உள்ளது.

    * அமெரிக்கா-கனடா இடையேயான எரிவாயு இணைப்பு திட்டத்திற்க்கு டிரம்ப் அனுமதி அளித்திருந்தார். இந்த எரிவாயு இணைப்பு திட்டத்தை ஜோ பைடன் ரத்து செய்ய உள்ளார்.

    * பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக சில இஸ்லாமிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய பயணத்தடையை டிரம்ப் விதித்திருந்தார். இந்த தடையை ஜோ பைடன் நீக்குகிறார்.
    Next Story
    ×