search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்த அமெரிக்கா

    கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்கா மற்றும் கியூபா இடையில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக மோதல் போக்கு நீடித்து வந்த நிலையில், ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சிக் காலத்தில் இருநாடுகளுக்கும் இடையே நட்பு மலர்ந்தது. ஆனால் அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவி ஏற்றது முதல் அவர் கியூபாவுடன் விரோத போக்கை கையாண்டு வருகிறார்.

    இந்தநிலையில் அவரது பதவிக் காலம் இன்னும் சில நாட்களில் முடிய இருக்கும் நிலையில் கியூபாவுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

    அந்த வகையில் கியூபாவை பயங்கரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் நாடாக கடந்த வாரம் அமெரிக்கா அறிவித்தது. இதற்கு கியூபா கடும் கண்டனம் தெரிவித்தது.

    இந்த நிலையில் கடுமையான மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் கூறி கியூபா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. அமெரிக்க நிதித்துறை செயலாளர் ஸ்டீவன் முனுச்சின் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

    இது பற்றி அவர் கூறுகையில் ‘‘கியூபாவிலும், உலகெங்கிலும் உள்ள மோசமான மனித உரிமை நிலைமைகளை நிவர்த்தி செய்ய அமெரிக்கா தொடர்ந்து அனைத்து கருவிகளையும் பயன்படுத்தும். அதன்படி உலக மனித உரிமைகள் மீறல் பொறுப்புக்கூறல் சட்டத்தின்கீழ் கியூபாவின் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
    Next Story
    ×