search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப் - பைடன்
    X
    டிரம்ப் - பைடன்

    டிரம்ப் பதவியை பறிக்கும் நடவடிக்கை தொடங்கியது- பாராளுமன்ற தலைவர் தகவல்

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றார். தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்ததால் அவர் பதவியை பறிக்கும் நடவடிக்கையை பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தொடங்கி இருக்கிறார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபைடன் வெற்றி பெற்றார். தற்போதைய அதிபர் டிரம்ப் தோல்வி அடைந்தார்.

    இதை முறைப்படி அறிவிக்கும் நிகழ்ச்சி பாராளு மன்றத்தில் சமீபத்தில் நடந்தது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் அத்துமீறி உள்ளே நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டனர். கலவரத்தை டிரம்ப் தூண்டிவிட்டதாக எதிர்க் கட்சி தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

    நாட்டின் அதிபரே கலவரத்தை தூண்டியதால் அதிகாரத் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று ஜனநாயக கட்சியினர் கூறினார்கள். இதற்கு டிரம்பின் குடியரசு கட்சியை சேர்ந்த 2 செனட் உறுபினர்கள் உள்பட மேலும் பல தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

    இதற்கிடையே பதவியை பறிக்கும் நடவடிக்கையை பாராளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி தொடங்கி இருக்கிறார்.

    அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டப்படி அதிபருக்கு உடல்நிலை மோசமாக இருந்தாலோ, அதிகார துஷ்பிரயோகத்தை கையில் எடுத்தாலோ அவரை துணை ஜனாதிபதி பதவிநீக்கம் செய்யும் அதிகாரம் உள்ளது.

    இந்த சட்டத்தின் அடிப்படையில் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இவ்வாறு செய்ய வேண்டும் என்றால் பாராளு மன்றத்தில் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவர வேண்டும். அதன் அடிப்படையில் துணை ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பார்.

    அந்த வகையில் பாராளுமன்ற கூட்டத்தை நடத்துவதற்கு தலைவர் நான்சி பெலோசி முயற்சித்து வருகிறார். இதற்காக அனைத்து எம்.பி.க்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். டிரம்புக்கு எதிராக ஓட்டளிக்கும்படி அவர் கேட்டுள்ளார்.

    இதற்கான கூட்டம் இன்று நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் துணை ஜனாதிபதியிடம் தீர்மானத்தை கொடுத்து வற்புறுத்துவார்கள்.

    அதன் அடிப்படையில் அதிபர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மந்திரிகளில் பாதி பேர் அனுமதி அளிக்க வேண்டும். அதன்பிறகு தான் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால் குடியரசு கட்சி உறுப்பினர்கள் இதற்கு அனுமதிக்க மாட்டார்கள். எனவே தீர்மானம் நிறைவேறுமா என்பது சந்தேகம் தான். ஆனாலும் பதவியை பறிக்கும் முயற்சியை கையில் எடுத்து இருக்கிறார்கள்.

    20-ந்தேதி புதிய அதிபராக ஜோபைடன் பதவி ஏற்க உள்ளார். எனவே டிரம்பின் பதவிக்காலம் முடிய இன்னும் 9 நாட்கள் மட்டுமே உள்ளன. அதற்குள் பதவியை பறித்து விட ஜனநாயக கட்சியினர் முயற்சிக்கிறார்கள். இந்த முயற்சியில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது.

    Next Story
    ×