search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனாவை உலகுக்கு வழங்கிய உகானில் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது

    கொரோனாவை உலகுக்கு தந்த உகான் நகரிலும் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. அங்கு சில முக்கிய குழுக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
    பீஜிங்:

    சீனாவில் உள்ள உகான் நகரில்தான் கடந்த ஆண்டு இதே மாதம் கொரோனா வைரஸ் உருவானது. இப்போது 200-க்கும் மேற்பட்ட உலக நாடுகளை கொரோனா வைரஸ் பாடாய்ப்படுத்தி வருகிறது. கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசிகள் உருவாக்கப்பட்டு அவற்றை போடும் பணி முன்னேறிய நாடுகளில் தொடங்கி விட்டது.

    இந்த நிலையில், கொரோனாவை உலகுக்கு தந்த உகான் நகரிலும் கொரோனா தடுப்பூசிபோடும் பணி தொடங்கி உள்ளது. அங்கு சில முக்கிய குழுக்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. 15 மாவட்டங்களில் 48 தேர்ந்தெடுக்கப்பட்ட கிளினிக்குகளில் 24-ந்தேதி முதல் இந்த தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. குறிப்பாக 18 வயது முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

    இந்த தகவலை நோய் கட்டுப்பாட்டு மையத்தின் துணை இயக்குனர் ஹீ ஷென்யு வெளியிட்டுள்ளார். இப்போது முதல் கட்டமாக தடுப்பூசி செலுத்தப்படுகிறவர்கள் 4 வாரங்கள் கழித்து மற்றொறு ‘டோஸ்’ செலுத்திக்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    அதே நேரத்தில் இன்னும் பல தடுப்பூசிகளுக்கு சீன அரசு அதிகாரப்பூர்வ சான்றளிக்கவில்லை.
    Next Story
    ×