search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
    X
    பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்

    திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாது - பிரதமர் போரிஸ் ஜான்சன்

    கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், திட்டமிட்டபடி கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாட முடியாது என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    பிரிட்டனில் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிப்பு எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது. ஒரே நாளில் 27 ஆயிரத்து 052 பேருக்கு தொற்று உறுதியானதால் அங்கு கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 20 லட்சத்தைக் கடந்துள்ளது 

    இந்நிலையில், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, தென்கிழக்கு இங்கிலாந்தின் பெரும் பகுதிகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்துக்காக விதிகள் தளர்த்தப்பட மாட்டாது. இங்கிலாந்தின் மற்ற பகுதிகளுக்கு கிறிஸ்துமஸ் தினம் குறைக்கப்பட்டுள்ளது.

    லண்டன், கென்ட், எசெக்ஸ் மற்றும் பெட்போர்ட்ஷைர் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் 4-ம் அடுக்கு பொது முடக்கம் அறிமுகப்படுத்தப்படும். அங்குள்ள குடியிருப்பாளர்களுக்கு தங்குமிடத்தில் உத்தரவு பிறப்பிக்கப்படும். அங்கு அனைத்து அத்தியாவசிய கடைகளும் மூடப்பட வேண்டும்.

    லண்டன் மக்கள் நகரத்தை விட்டு வெளியேற நினைத்தால் கைது செய்யப்படலாம் என எச்சரிக்கப்பட்டு உள்ளது.

    அதிகபட்சமாக 3 குடும்பங்கள் மட்டுமே இம்மாதம் 23 முதல் 27-ம் தேதிவரை ஒன்றுகூட முடியும். பிரிட்டனில், கிருமித்தொற்று திடீரென உயர்ந்துள்ள நிலையில் இத்தகைய அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×