search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மைக் பாம்பியோ
    X
    மைக் பாம்பியோ

    கொரோனா வைரஸ் பீதி - தனிமைப்படுத்திக்கொண்ட மைக் பாம்பியோ

    தன்னுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோ தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இதுவரை 1 கோடியே 72 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். குறிப்பாக கடந்த சில நாட்களாக தினமும் சராசரியாக 1 லட்சம் பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. 

    அதிபர் டிரம்ப் உள்ளட அந்நாட்டின் முக்கிய தலைவர்களும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். மேலும், பல மந்திரிகளும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தங்களை தாங்களாகவே சுய தனிமைபடுத்தலுக்கு உட்படுத்திக்கொண்டும் வருகின்றனர்.

    அந்த வரிசையில் அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மைக் பாம்பியோவும்(56) இணைந்துள்ளார்.

    மைக் பாம்பியோவுடன் தொடர்பில் இருந்த ஒரு நபருக்கு நேற்று கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மைக் பாம்பியோவுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா ’நெகட்டிவ்’ என முடிவு வந்தது. 

    ஆனாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மைக் பாம்பியோ தனிமைபடுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×