search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்
    X
    இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன்

    ஒப்பந்தங்கள் எதுவுமின்றி ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து இங்கிலாந்து வெளியேற வாய்ப்பு - போரிஸ் ஜான்சன்

    ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி இங்கிலாந்து வெளியேற வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.
    லண்டன்:

    பொருளாதார மற்றும் அரசியல் ஒத்துழைப்புக்காக இரண்டாம் உலகப் போருக்கு பின் ஏற்படுத்தப்பட்டதுதான் ஐரோப்பிய ஒன்றியம்.

    இந்த ஒன்றியத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, குரோஷியா, சிப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், பின்லாந்து, ப்ரான்ஸ், கிரீஸ், ஜெர்மனி, ஹங்கேரி, அயர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின், ஸ்வீடன், பிரிட்டன் உள்ளிட்ட 28 நாடுகள் இருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்திற்கென  யூரோ என்ற தனி பணம் உள்ளது. இதனை 19 நாடுகள் பயன்படுத்துகின்றன. இதற்கென பாராளுமன்றமும் உள்ளது.

    இதற்கிடையே, ஐரோப்பிய கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து வெளியேறும் ‘பிரெக்சிட்’ நடவடிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே சிக்கலை எதிர்கொண்டு வருகிறது. இந்த பிரச்சினையால் டேவிட் கேமரூன், தெரசா மே ஆகியோர் பிரதமர் பதவியை இழந்தனர்.

    அவர்களைத் தொடர்ந்து இங்கிலாந்தில் கடந்த ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற போரிஸ் ஜான்சனும் ‘பிரெக்சிட்’டை நிறைவேற்ற முடியாமல் தவித்து வருகிறார். 

    இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒப்பந்தங்கள் எதுவும் இன்றி இங்கிலாந்து வெளியேற வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது என அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, போரிஸ் ஜான்சன் கூறியதாவது:

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் இங்கிலாந்து ஒரு வர்த்தக ஒப்பந்தத்தை எட்டவில்லை என்பதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. நாங்கள் மிகவும் தெளிவாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறோம். 

    இப்போது ஒரு வலுவான வாய்ப்பு, வலுவான சாத்தியம் உள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஆஸ்திரேலிய உறவைப் போன்ற ஒரு தீர்வை நாங்கள் விரைவில் பெறுவோம்.

    ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக ஒப்பந்தம் இல்லை என்பதற்கு 'வலுவான வாய்ப்பு' இருக்கிறது. வணிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆஸ்திரேலியா பாணி விருப்பத்திற்குத் தயாராக வேண்டும் என தெரிவித்தார்.

    எந்த ஒப்பந்தமும் இல்லாத பிரெக்சிட்டுக்குத் தயாராகுமாறு மந்திரிகளை அவர் அறிவுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    Next Story
    ×