search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப் - மெலனியா
    X
    டிரம்ப் - மெலனியா

    வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறி வீட்டிற்கு சென்றால் போதும் என நினைக்கும் டிரம்ப் மனைவி மெலனியா

    அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா வெள்ளை மாளிகையில் இருந்து விரைவில் வெளியேற நினைப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 306 தேர்தல் சபை வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டொனால்டு டிரம்ப் 232 தேர்தல் சபை வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்துள்ளார்.

    தேர்தலில் வெற்றிபெற்றுள்ள ஜோ பைடன் அமெரிக்க அதிபராக 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்க உள்ளார். ஆனால், தேர்தலில் தோல்வியடைந்த தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் தேர்தல் முறை தொடர்பாக தொடர்ந்து குற்றம்சுமத்தி வருகிறார்.

    ஆனாலும், அமெரிக்க அதிபர் பொறுப்புகளை ஜோ பைடனுக்கு மாற்றும் அதிகார மாற்றநடைமுறை நடைபெற்று வருகிறது. இதனால், ஜனவரி 20 ஆம் தேதிக்கு முன்னதாகவே தற்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்பின் மனைவி மெலனியா டிரம்ப் ஜனவரி 20-ம் தேதிக்கு முன்னதாகவே வெள்ளைமாளிகையை விட்டு வெளியேற நினைப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    தேர்தல் முடிவுகள் தொடர்பாக குற்றம்சுமத்திவரும் அதிபர் டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேற மறுத்துவரும் நிலையில் மெலனியா டிரம்ப் வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறி வீட்டிற்கு சென்றால் போதும் என நினைப்பதாக அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

    வெள்ளைமாளிகையை விட்டு வெளியேறிய பின்னர் நியூயார்க்கில் உள்ள டிரம்பின் வீடு மற்றும் புளோரிடா மாகாணத்தின் பிலேம் பீட்ச் பகுதியில் உள்ள வீட்டிற்கு என்னென்ன பொருட்கள் தேவை என்பதை பற்றி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    வெள்ளைமாளிகையில் உள்ள அதிபர் டிரம்பிற்கு சொந்தமான பொருட்களை நியூயார்க்கில் உள்ள டிரம்பின் வீட்டிற்கு மாற்றுவது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    பிற  முன்னாள் அமெரிக்க அதிபர்கள் போல் இல்லாமல் டிரம்ப் தனது பதவி காலம் முடிவடைந்தபின்னரும் தொடர்ந்து தொழில் உள்பட பல்வேறு விவகாரங்களில் மீண்டும் கவனம் செலுத்துவார் என எதிபார்க்கப்படுகிறது. 

    மேலும், அவர் நியூயார்க் வீட்டிலும், பிலேம் பீட்ச் வீட்டிலும் மாற்றிமாற்றி தங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமால்லாமல் அதிபரின் மனைவி என்ற முறையில் தனது பதவிகாலம் முடிவடைந்தபின்னரும் அமெரிக்க மக்களின் வரிப்பணத்தில் இருந்து தனக்கு ஏதேனும் தொகை ஒதுக்கப்படுமான என மெலனியா டிரம்ப் கேட்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து டிரம்ப் வெளியேறிய பின்னர் அவரை விவாகரத்து செய்ய மெலனியா டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்திருந்தன. 

    தற்போது, அதிபர் டிரம்ப் தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளது என குற்றம்சுமத்தி வரும் நிலையிலும் அவரது மனைவி அதிபர் மாளிகையை விட்டு வெளியேறினால் வீட்டிற்கு சென்றால் போதும் என்ற மனநிலையுடன் இருப்பது அமெரிக்க அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  
    Next Story
    ×