search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப்
    X
    டிரம்ப்

    சீன வைரசால் எனது வக்கீல் ரூடி கிலியானி பாதிப்பு - டிரம்ப் சொல்கிறார்

    நியூயார்க் நகரின் வரலாற்றிலேயே சிறந்த மேயரான ரூடி கிலியானி சீன வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் நியூயார்க் நகரின் முன்னாள் மேயரான ரூடி கிலியானி ஜனாதிபதி டிரம்பின் தனி வக்கீலாக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் ரூடி கிலியானி கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் “நியூயார்க் நகரின் வரலாற்றிலேயே சிறந்த மேயரும், அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் முறைகேடான தேர்தலில் சளைக்காமல் பணியாற்றியவருமான ரூடி கிலியானி சீன வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளார். விரைவில் குணமடையுங்கள் ரூடி. நாம் தொடர்ந்து நமது பணியை செய்வோம்” என தெரிவித்துள்ளார்.

    அதே சமயம் தனக்கு கொரோனா தொற்று இருப்பது குறித்து ரூடி கிலியானி எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை. முன்னதாக கடந்த மாத இறுதியில் டிரம்ப் பிரசார குழுவின் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ரூடி கிலியானியின் மகனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×