search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆதர் பூனவாலா
    X
    ஆதர் பூனவாலா

    கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் இந்திய சீரம் நிறுவன தலைவருக்கு கவுரவம்

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்து போராடியதற்காக இந்திய சீரம் நிறுவன தலைவரை சிங்கப்பூரின் முன்னணி நாளிதழான ‘தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ தேர்வு செய்து கவுரவித்துள்ளது.
    சிங்கப்பூர்:

    கொரோனா வைரஸ் பெருந்தொற்றை எதிர்த்து போராடியதற்காக ஆசிய கண்டத்தை சேர்ந்த 6 பேரை சிங்கப்பூரின் முன்னணி நாளிதழான ‘தி ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ்’ தேர்வு செய்து கவுரவித்துள்ளது.

    அவர்களில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கிய ‘கோவிஷீல்டு’ தடுப்பூசியை இந்தியாவில் தயாரித்து சோதித்து வரும் புனேயை சேர்ந்த இந்திய சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதர் பூனவாலாவும் ஒருவர் ஆவார். இது இந்தியாவுக்கு கிடைத்த கவுரவம் ஆகும்.

    சீன ஆராய்ச்சியாளர் ஜாங் யோங்சென், சீன மேஜர் ஜெனரல் சென் வெய், ஜப்பான் டாக்டர் ரியூச்சி மோரிஷிட்டா, சிங்கப்பூர் பேராசிரியர் ஓய் எங் ஆங் மற்றும் தென்கொரியாவின் சியோ ஜங் ஜின் ஆகியோர் எஞ்சிய 5 பேர் ஆவர்.
    Next Story
    ×