search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டாக்டர் ஹெபா மம்தோ
    X
    டாக்டர் ஹெபா மம்தோ

    துபாயில், நீரிழிவு நோயால் 30 சதவீதம் பேர் பாதிப்பு- சுகாதார ஆணைய அதிகாரி பேட்டி

    துபாயில் வசிப்பவர்களில் 30 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் என்று ஆய்வின் முடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
    துபாய்:

    துபாய் சுகாதார ஆணையத்தின் அதிகாரி டாக்டர் ஹெபா மம்தோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    துபாயில் வசிக்கும் பொதுமக்களின் உடல்நலத்தை கவனத்தில் கொண்டு நீரிழிவு நோய் பாதிப்பு குறித்த ஆய்வு கடந்த 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் மொத்தம் வசிக்கும் மக்களின் நீரிழிவு நோயின் பாதிப்பு மற்றும் பாதிப்பிற்கு முன் உள்ள நிலை ஆகியவை குறித்து நுட்பமாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

    இந்த ஆய்வில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 13.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். நீரிழிவு நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக 16.2 சதவீதம் பேரிடம் கண்டறியப்பட்டுள்ளது. இதுவே கடந்த 2017-ம் ஆண்டில் செய்யப்பட்ட ஆய்வில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 15.2 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நீரிழிவு நோய் தாக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக 45.8 சதவீதம் பேர் எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆய்வின் முடிவில் 25 வயது முதல் 45 வயதுடைய 13 சதவீதம் பேர் நீரிழிவு நோய் தாக்க வாய்ப்புடைய நபர்களாக உள்ளனர். இதில் 5 சதவீதம் பேர் மட்டுமே உடற்பயிற்சி செய்ய ஆர்வம் உள்ளதாகவும், விளையாட்டுகளில் ஈடுபட்டு வருவதாகவும் கூறியுள்ளனர்.

    17 சதவீதம் பேர் தினசரி வீட்டு வேலைகள் மற்றும் நடந்து செல்வது போன்ற உடல் செயல்பாடுகளை செய்து வருவதாக கூறியுள்ளனர். நீரிழிவு நோய் தாக்கப்பட்டவர்களில் அமீரகத்தை சேர்ந்த 28 சதவீதம் பேரும், 10 சதவீத வெளிநாட்டவரும் புகைபிடிப்பதாக கூறியுள்ளனர். அமீரகத்தை சேர்ந்தவர்களில் 14.5 சதவீதமும், வெளிநாட்டை சேர்ந்தவர்களில் 6.3 சதவீதம் பேரும் புகை பிடிப்பதில்லை என கருத்து தெரிவித்துள்ளனர்.

    நீரிழிவு நோயால் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் 2.9 சதவீதம் 18 வயது முதல் 24 வயதுடையவர்கள் ஆவர். அதேபோல் 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 43.7 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக கடந்த ஆண்டு ஆய்வறிக்கையில் துபாயில் வசிக்கும் மொத்த மக்கள் தொகையில் 30 சதவீதம் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிப்புக்குள்ளாக இருப்பவர்கள் என முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×