search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஷிய அதிபர் புதின், ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து
    X
    ரஷிய அதிபர் புதின், ஸ்புட்னிக் வி தடுப்பு மருந்து

    ரஷியாவில் மிகப்பெரிய அளவில் கொரோனா தடுப்பூசி பணியை தொடங்குங்கள்: அதிகாரிகளுக்கு புதின் உத்தரவு

    ரஷியாவில் அடுத்த வாரத்தில் இருந்து கொரோனா தடுப்பூசி பணியை மிகப்பெரிய அளவில் தொடங்குங்கள் என அதிகாரிகளுக்கு அதிபர் புதின் உத்தரவிட்டுள்ளார்.
    கொரோனா வைரஸ் தொற்று கடந்த மார்ச் பிப்ரவரி மாதத்தில் இருந்து ஆகஸ்ட் மாதம் வரை மிகப்பெரிய அளவில் உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியது. தொற்று நோய் என்பதில் உயிரைக் குடித்ததுடன், பொருளாதாரத்தையும் மிகப்பெரிய அளவில் பாதித்தது.

    இதனால் எப்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்படும் என மக்கள் ஏங்கிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில்தான் சைபர், மாடர்னா, ரஷியாவின் ஸ்புட்னிக் V ஆகிய தடுப்பு மருந்துகள் 95 சதவீதம் செயல்திறன் கொண்டதாக அறிவிக்கப்பட்டது.

    இந்த தடுப்பூசிகள் தன்னார்வலர்களுக்கு செலுத்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செலுத்தப்பட்டது. இரண்டிலும் வெற்றி கண்டதால் முன்கள பணியாளர்கள் போன்றோருக்கு செலுத்தப்படுகிறது. பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்த அந்தந்த நாடுகள் தயாராகி வருகின்றன.

    மாடர்னா நிறுவனம் தடுப்பூசியை சந்தைக்கு கொண்டு வர அனுமதி கோரியுள்ளது. சைபர் நிறுவனத்தின் தடுப்பூசி பிரிட்டனில் அடுத்த வாரத்தில் இருந்து பயன்பாட்டிற்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் ஸ்புட்னிக் V தடுப்பு மருந்தை ரஷியாவில் அடுத்த வாரத்தில் இருந்து மிகப்பெரிய அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக பயன்படுத்த அந்நாட்டு அதிபர் புதின் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் அடுத்த வாரத்தில் இருந்து ரஷியா முழுவதும் கொரோனா தடுப்பூசி நடைமுறைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×