search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிரவ் மோடி
    X
    நிரவ் மோடி

    லண்டன் சிறையில் நிரவ் மோடி காவல் 29-ந்தேதி வரை நீட்டிப்பு

    லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின் காவலை 29-ந்தேதி வரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
    லண்டன்:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி மோசடி செய்த வைர வியாபாரி நிரவ் மோடி, வெளிநாட்டுக்கு தப்பிச்சென்றார். இந்தியாவின் வேண்டுகோளின்பேரில், கடந்த ஆண்டு மார்ச் 19-ந் தேதி அவர் லண்டனில் கைது செய்யப்பட்டார். அப்போதிருந்து அவர் லண்டன் சிறையில் இருந்து வருகிறார். அவருக்கு இன்னும் ஜாமீன் கிடைக்கவில்லை.

    இந்தநிலையில், நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக, நேற்று லண்டன் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தலைமை மாஜிஸ்திரேட்டு எம்மா அர்புத்நாட் முன்னிலையில், காணொலி காட்சி மூலமாக நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார். அவரது காவலை 29-ந்தேதிவரை நீட்டித்து மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும், நிரவ் மோடியை நாடு கடத்தக்கோரும் வழக்கின் இறுதி விசாரணை, ஜனவரி 7 மற்றும் 8-ந் தேதிகளில் மாவட்ட நீதிபதி சாமுவேல் கூசி முன்னிலையில் நடைபெறும் என்றும் தெரிவித்தார்.
    Next Story
    ×