search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கிருமிநாசினி தெளிக்கும் ஊழியர்
    X
    கிருமிநாசினி தெளிக்கும் ஊழியர்

    மெக்சிகோவை விடாத கொரோனா - 11 லட்சத்தைக் கடந்தது பாதிப்பு எண்ணிக்கை

    கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மெக்சிகோவில் பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளது.
    மெக்சிகோ சிட்டி:

    உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 6 கோடியைத் தாண்டியுள்ளது. கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 14.50 லட்சத்தைக் கடந்துள்ளது. கொரோனா வைரஸ் தாக்குதலில் சிக்கி மீண்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியை தாண்டியது.

    கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் மெக்சிகோ தற்போது 11-வது இடத்தில் உள்ளது. 

    இந்நிலையில், மெக்சிகோவில் ஒரே நாளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதியான நிலையில் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 11 லட்சத்தைக் கடந்துள்ளது. 

    மேலும் 585 பேர் உயிரிழந்த நிலையில், அங்கு கொரோனா வைரசால் இறந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 5 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

    8.13 லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 1.81 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
    Next Story
    ×