search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் நடத்திய தாக்குதல்
    X
    மும்பையில் நடத்திய தாக்குதல்

    மும்பை தாக்குதல் குற்றவாளி பாகிஸ்தான் சிறையில் இல்லை - உளவுத்துறை

    மும்பை தாக்குதல் குற்றவாளி பாகிஸ்தான் சிறையில் இல்லை அவரது வீட்டில் பாதுகாப்பாக உள்ளார் என உளவுத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.
    புதுடெல்லி:

    கடந்த  2019 ஜூலை மாதம் சயீத் முறையாக கைது செய்யப்பட்டார். பிப்ரவரியில் நடந்த பயங்கரவாத நிதி வழக்கில் பத்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது கடந்த வாரம், பயங்கரவாத நிதியுதவி தொடர்பான இரண்டு வழக்குகளில் சயீதுக்கு மற்றும் ஒரு  சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

    ஆனால் ஐ.நா.பாதுகாப்புக் குழுவால் பயங்கரவாதி என அறிவிக்கப்பட்ட  லஷ்கர்-இ-தொய்பா நிறுவனர் ஹபீஸ் சயீத் தற்போது  சிறையில் இல்லை, ஆனால் லாகூரில் உள்ள அவரது ஜோஹர் டவுன் இல்லத்தில் அவர் பயங்கரவாதக் குழுவை நடத்தி வருகிறார், இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

    ஹபீஸ் சயீத்தின் கைது மற்றும் அவரது அடுத்தடுத்த அவருக்கு அறிவிக்கபட்ட தண்டனை ஆகியவை சர்வதேச  நிதி நடவடிக்கை பணிக்குழுவின் 'சாம்பல் பட்டியலில்' இருந்து விலகி இருக்க இம்ரான் கான் அரசாங்கத்தின் முயற்சியாக கருதப்படுகிறது. 

    இது குறித்து பெயர் குறிப்பிட விரும்பாத உளவுத்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது ஹபீஸ் சயீத் லாகூரின் உயர் பாதுகாப்பு கோட் லாக்பாத் சிறையில் இல்லை என்று பரவலாக விளம்பரப்படுத்தப்பட்டது. "அவர் பெரும்பாலும் வீட்டில் இருக்கிறார் ... வெளிப்படையாக பாதுகாப்புக் காவலில் இருக்கிறார், அது விருந்தினர்களைப் சந்திக்ககூட உதவுகிறது.

    கிடைக்கக்கூடிய தகவல்களின் அடிப்படையில் எங்கள் புரிதல் இது முறையில்லா ஏற்பாடாக கூட இருக்கலாம். ஹபீஸ் சயீத்தின் வீட்டை சிறை என்று அறிவிக்கும் முறையான உத்தரவு உள்ளதா என்பது எங்களுக்குத் தெரியாது என்று  உளவுத்துறை அதிகாரி கூறினார்.

    மேலும் கடந்த மாதம், சயீத்தின் வீட்டில் தலைமை செயல்பாட்டு தளபதியும், லஷ்கர் இ தொய்பா  ஜிஹாத் பிரிவின் தலைவருமான  ஜாகி-உர்-ரெஹ்மான் லக்வி சந்தித்து பேசி உள்ளார். இந்த சந்திப்பு ஜிஹாத்துக்கான நிதி சேகரிக்க அவர்கள் எடுக்க வேண்டிய சில நடவடிக்கைகளை மையமாகக் கொண்டதாக கூறப்படுகிறது என கூறினார்.

    சயீத்தைப் போலவே, லக்வியும் ஐ.நா.பாதுகாப்புக் குழுவால்  அறிவிக்கபட்ட  பயங்கரவாதி ஆவார்  மற்றும் மும்பை பயங்கரவாத தாக்குதல்களின் முன்னணி சதிகாரர் ஆவார்.

    சர்வதேச அழுத்தங்களால் பயங்கரவாத செயலுகளுக்காக பாகிஸ்தான் பாதுகாப்பு படையினரால் அவர் பல முறை கைது செய்யப்பட்டுள்ளார், ஆனால் அவரது தலைவர்  ஹபீஸ் சயீத்தைப் போலவே, ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டார்.

    மும்பை தாக்குதலுக்கு முன்னர் இந்தியாவில் உளவு நடவடிக்கைகளுக்காக பாகிஸ்தானில் பிறந்த அமெரிக்க குடிமகன் டேவிட் ஹெட்லியை வற்புறுத்தியது, வழிநடத்தியது மற்றும் கையாண்டது லக்வி தான் என்று இந்திய உளவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லியில் உள்ள பாகிஸ்தான் பார்வையாளர்கள், ஹபீஸ் சயீத் சிறையில் அடைக்கப்படவில்லை என்ற உளவுத்துறை தகவல்கள் பயங்கரவாதிகளை கையாள்வதில் பாகிஸ்தானின் சாதனைப் வரலாறு  குறித்த ஒரு வடிவத்துடன் ஒத்துப்போகின்றன என்கின்றனர்.
    Next Story
    ×