search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    ஒரே ராக்கெட்டில் 60 செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பிய ஸ்பேஸ் எக்ஸ்

    அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் கேப் கேனவெரலில் இருந்து பால்கன்9 ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில் 60 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.
    வாஷிங்டன்:

    அமெரிக்காவை சேர்ந்த தனியார் விண்வெளி ஆய்வு நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் விண்வெளி ஆய்வில் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது.

    அந்த வகையில் உலகம் முழுவதும் சீரான மற்றும் அதிவேக இணைய சேவை வழங்குவதற்காக ‘ஸ்டார் லிங்க்’ என்ற திட்டத்தை செயல்படுத்த ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம் முடிவு செய்துள்ளது.

    இதற்காக தலா 227 கிலோ எடையுடைய 1,440 செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்துவதை இலக்காக கொண்டு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தொடர்ந்து செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.

    அந்த வகையில் 16-வது கட்டமாக நேற்று அமெரிக்காவின் கேப் கேனவெரலில் இருந்து பால்கன்9 ராக்கெட் மூலம் ஒரே சமயத்தில் 60 செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது.

    இந்த செயற்கைகோள்கள் அனைத்தும் புவிவட்டப்பாதையில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இந்த 60 செயற்கைகோள்களுடன் சேர்த்து ஒட்டுமொத்தமாக 955 செயற்கைகோள்களை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் விண்ணில் செலுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×