search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பைசர்
    X
    பைசர்

    ஒப்புதல் பெற்ற சில மணி நேரத்தில் மருந்து அனுப்பப்படும் - பைசர் நிறுவனம்

    அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் ஒப்புதல் பெற்ற சில மணி நேரத்தில் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என பைசர் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.
    வாஷிங்டன்:

    ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த தடுப்பு மருந்து, இறுதிக்கட்ட பகுப்பாய்வு தரவுகளின்படி 95 சதவீதம் திறன் வாய்ந்தது.

    எங்கள் தடுப்பு மருந்து அனைத்து தரப்பினருக்குமானது. வயதானவர்களுக்கு பாதிப்பு ஏற்படாமல் தடுப்பதாகவும், தீவிர பக்கவிளைவுகள் எதையும் ஏற்படுத்தவில்லை.

    இன்னும் சில நாட்களில் அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம் ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளதாக மருந்து நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
     
    பைசர் நிறுவனம் கண்டுபிடித்துள்ள இந்த தடுப்பு மருந்து மைனஸ் 70 டிகிரி குளிர் நிலையில் பாதுகாக்கப்பட வேண்டும். மேலை நாடுகளில் குளிர் நிலவுவதால் அங்கு இவற்றை பாதுகாப்பது மிக எளிது. 

    இந்தியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் காலநிலை அளவு அதிகமாகவே உள்ளது. எனவே, வெப்ப மண்டலங்களில் இந்த தடுப்பு மருந்துகளை எடுத்துச்செல்வது மிகக் கடினம். இது தற்போது பைசர் நிறுவனத்துக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.

    இந்நிலையில், பைசர் தடுப்பூசி மருந்து நிறுவன அதிகாரி ஆல்பர்ட் பவுர்லா கூறுகையில், அமெரிக்க தடுப்பு மருந்து அமைப்பிடம்  ஒப்புதல் பெற்ற சில மணி நேரத்தில் தடுப்பூசி மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவித்துள்ளார். 

    மேலும், பைசர் தடுப்பூசி கண்டுபிடிப்பு பயனுள்ளதாக இருந்த தினமே எனது வாழ்க்கையின் மிக அற்புதமான நாள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    Next Story
    ×