search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டிரம்ப் - மெலனியா
    X
    டிரம்ப் - மெலனியா

    டிரம்பை விவாகரத்து செய்யப்போகிறாரா மெலனியா?

    அமெரிக்க அதிபர் டிரம்பை அவரது மனைவி மெலனியா விவாகரத்து செய்யப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு மொத்தம் 3 மனைவிகள், 5 குழந்தைகள். முதல் மனைவி இயாவாவை 1977-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட டிரம்ப் அவரை 1992 ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். முதல் மனைவி இயாவா மூலம் ஜான் டிரம்ப், எரிக் டிரம்ப் என்ற மகன்களும்  இவாங்கா டிரம்ப் என்ற மகளும் என 3 பேர் உள்ளனர். 

    முதல் மனைவியை விவாகரத்து செய்த பின் 1993-ம் ஆண்டு மர்லா ஆன் மப்லஸ் என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவர் மூலம் டிப்னி டிரம்ப் என்ற மகள் உள்ளார். இரண்டாவது மனைவியை 1999 ஆம் ஆண்டு டிரம்ப் விவாகரத்து செய்தார். 

    அதன்பின்னர் மெலனியாவை 2005 ஆம் ஆண்டு டிரம்ப் திருமணம் செய்தார். மெலனியா மூலம் பரோன் டிரம்ப் என்ற மகன் உள்ளான். 14 வயது நிரம்பிய பரோன் டிரம்ப் தனது தாய் மெலனியா மற்றும் தந்தை அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் வாழ்ந்து வருகிறான்.

    இதற்கிடையில், சமீப காலமாக மெலனியாவிற்கும் அதிபர் டிரம்பிற்கும் இடையே மனக்கசப்பு இருந்து வந்ததாக பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தது. 

    தற்போது, நடைபெற்ற அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் தோல்வியடைந்ததையடுத்து அவருடனான 15 ஆண்டுகால திருமண வாழ்க்கைக்கு மெலனியா டிரம்ப் முற்றுப்புள்ளி வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிபர் டொனால்டு டிரம்ப்பை அவரது மனைவி மெலனியா விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக அதிபர் டிரம்பின் நிர்வாகத்தில் உதவியாளராக இருந்த ஸ்டீப்னி வால்கஆப் கூறுகையில், டிரம்ப் மற்றும் மெலனியா இடையிலான திருணமம் என்பது தொழில்ரீதியிலான திருமணம் ஆகும். 

    வெள்ளைமாளிகையில் டிரம்பிற்கும் மெலனியாவுக்கும் தனித்தனி படுக்கை அறைகள் தான். மெலானியாவின் மகன் பரோனுக்கு சொத்தில் சமமான பங்கை வழங்க மெலனியா திருமணத்திற்கு பிந்தைய ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறார்’ என்றார்.

    மற்றொரு உதவியாளரான ஒமரோசா மங்லட் கூறுகையில், டிரம்ப் மெலனியா இடையேயான திருமண உறவு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது. டொனால்டு டிரம்ப் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறப்போகும் ஒவ்வொரு நிமிடத்தையும் மெலனியா எண்ணிக்கொண்டு இருக்கிறார். டிரம்ப் அதிபர் மாளிகையை விட்டு வெளியேறிய உடன் அவரை மெலனியா விவாகரத்து செய்துவிடுவார்.

    டிரம்ப் அதிபராக இருக்கும்போது மெலனியா விவாகரத்து பெற்றால் அவரை தண்டிக்க டிரம்ப் வழிகளை கண்டுபிடித்து விடுவார். ஆகையால் தான் டிரம்ப் அதிபராக இருக்கும்போது மெலனியா விவாகரத்து பெறவில்லை’ என்றார்.

    இதற்கிடையில் டிரம்ப் வெள்ளைமாளிகையில் இருந்து வெளியேறிய பின்னர் 5 மாதங்கள் கழித்து மெலனியா விவாகரத்து கோர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இந்த சர்ச்சைகள் அடங்குவதற்குள் தேர்தல் முடிவுகள் தொடர்பாக மெலனியா டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை பதிவிட்டிருந்தார். 

    அதில், ‘ நேர்மையான தேர்தல் நடைபெற அமெரிக்க மக்கள் தகுதியானவர்கள். சட்டப்படியான வாக்குகள் ஒவ்வொன்றும் எண்ணப்பட வேண்டும். சட்டவிரோதமான வாக்குகள் அல்ல. முழுமையான வெளிப்படை தன்மை மூலம் நாம் நமது ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×