search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    க்சி ஜின்பிங்- ஜோ பைடன்
    X
    க்சி ஜின்பிங்- ஜோ பைடன்

    அமெரிக்காவின் அடுத்த அதிபராக ஜோ பைடனை ஒப்புக்கொள்ள மறுக்கும் சீனா

    அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஜோ பைடனை வாழ்த்த சீனா மறுத்துள்ளது.
    பீஜிங்:

    அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்பை தோற்கடித்து, ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றுள்ளார். டிரம்ப் 214 தேர்தல் வாக்குகளை பெற்றுள்ள நிலையில், ஜோ பைடன் 270 க்கும் அதிகமான வாக்குகளை பெற்று அமெரிக்காவின் 46வது அதிபராக தேர்வாகியுள்ளார். ஜோ பைடனுக்கு உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஜோ பைடனை வாழ்த்த சீனா மறுத்துவிட்டது, 

    "அமெரிக்க சட்டங்கள் மற்றும் நடைமுறைகளுக்கு ஏற்ப தேர்தலின் முடிவு தீர்மானிக்கப்படும் என்பது எங்கள் புரிதல்" என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் நிருபர்களிடம் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது:-

    "சம்பந்தப்பட்ட விஷயங்களில் சீனாவின் நிலைப்பாடு நிலையானது மற்றும் தெளிவானது. நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டு நலன்களைப் பாதுகாப்பதற்கான எங்கள் தீர்மானம் அசைக்க முடியாதது. 

    சீனாவும் அமெரிக்காவும் பரஸ்பர மரியாதை மற்றும் பரஸ்பர அடிப்படையில் இருக்கும் வேறுபாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று நாங்கள் எப்போதும் கூறி வருகிறோம் என கூறினார். 
    Next Story
    ×