search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஜோ பைடன்
    X
    ஜோ பைடன்

    அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை - ஜோ பைடன் உறுதி

    அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே கொரோனா வைரசை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் ஜோ பைடன் தெரிவித்தார்.
    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரும் தற்போதைய அதிபருமான டிரம்ப்பை எதிர்த்து ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் போட்டியிட்டார். அதேபோல், துணை அதிபர் வேட்பாளர்களாக குடியரசு கட்சியின் மைக் பென்ஸ்சும், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டனர்.

    அமெரிக்க தேர்தலில் மொத்தமுள்ள 538 தேர்தல் சபை வாக்குகளில் 270 தேர்தல் சபை வாக்குகளை பெறும் வேட்பாளர் அதிபர் ஆக முடியும்.

    தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த சில நாட்களாக எண்ணப்பட்டுவந்த நிலையில், வெற்றியை தீர்மானிக்கும் பென்சில்வேனியா மாநிலத்தின் வாக்குகள் நேற்று (இந்திய நேரப்படி இரவு 10) எண்ணப்பட்டன. அதில் இந்த மாநிலத்திலும் உள்ள 20 இடங்களையும் ஜோ பைடன் கைப்பற்றினார்.

    இதையடுத்து, பெரும்பான்மைக்கு 270 தேர்தல் சபை வாக்குகள் தேவையாக உள்ள நிலையில், ஜோ பைடன் 290 தேர்தல் சபை வாக்குகளை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் தேர்வாகியுள்ளார். அதேபோல், துணை அதிபராக இந்திய வம்சாவழியான கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார்.

    அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெற்றிபெற்றுள்ள போதும் அவர் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 20-ம் தேதி தான் முறைப்படி அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ளார். அதிபராக ஜோ பைடன் பதவியேற்பதற்கு இன்னும் 72 நாட்கள் உள்ளன.

    இந்நிலையில், தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான உடன் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற ஜோ பைடன் மற்றும் துணை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற கமலா ஹாரிஸ் கூட்டாக வெற்றிவிழா நிகழ்ச்சியில் பங்கேற்றனர். 

    தனது ஆதரவாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் பேசிய ஜோ பைடன், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான திட்டங்களை எடுத்துரைத்தார்.

    ஜோ பைடன் கூறியதாவது:-

    அனைவரிடமும் நான் கூறிக்கொள்வது என்னவென்றால், அதிபராக பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். 

    அதற்காக திங்கட்கிழமை (நாளை) முன்னணி அறிவியல் விஞ்ஞானிகள் மற்றும் நிபுணர்கள் அடங்கிய குழுவினர் பெயர்களை வெளியிட உள்ளேன். 

    இந்த குழுவினர் 2021 ஜனவரி 20-ம் தேதி முதல் அமெரிக்காவில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான செயல்திட்டங்களை அமல்படுத்துவது தொடர்பாக உரிய திட்டங்களை வகுக்க உள்ளனர்.

    என்றார்.
    Next Story
    ×