search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்
    X
    சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்

    அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் - சீனா எச்சரிக்கை

    தைவானுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்தது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள சீனா இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது.
    பீஜிங்:

    தீவு நாடான தைவானை தங்கள் நாட்டின் ஒரு பகுதி என சீனா கூறி வருகிறது. இதனால் தைவானுக்கு அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்வதை சீனா கடுமையாக எதிர்த்து வருகிறது.

    ஆனால் சீனாவின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்கா தைவானுக்கு தொடர்ந்து ஆயுதங்களை விற்பனை செய்து வருகிறது.

    அந்த வகையில் கடந்த வாரம் 2.37 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.17 ஆயிரத்து 478 கோடி) மதிப்புடைய 100 ஹார்பூன் ஏவுகணை அமைப்புகளை தைவானுக்கு விற்க அமெரிக்கா ஒப்புதல் அளித்தது.

    அதன் தொடர்ச்சியாக தற்போது 600 மில்லியன் டாலர் (சுமார் ரூ.4 ஆயிரத்து 485 கோடி) மதிப்பில் ஆயுதங்களுடன் கூடிய ஆளில்லா விமானங்களை தைவானுக்கு வழங்க உள்ளதாக அமெரிக்க அறிவித்துள்ளது.

    இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள சீனா இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம் என எச்சரித்துள்ளது.

    இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறுகையில் “தைவானுக்கு ஆயுதங்களை விற்பதன் மூலம் அமெரிக்கா சீனாவின் உள் விவகாரங்களில் மிருகத்தனமாக தலையிடுகிறது. மேலும் சீனாவின் இறையாண்மையும் பாதுகாப்பு நலன்களையும் குறைமதிப்புக்கு உட்படுத்துகிறது.

    சீன அமெரிக்க உறவுகள் மட்டும் தயவால் ஜலசந்தியில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு மேலும் சேதம் ஏற்படாமல் இருக்க இதுபோன்ற அனைத்து விற்பனையிலும் அமெரிக்கா ரத்து செய்ய வேண்டும். இல்லையென்றால் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு சரியான மற்றும் தேவையான பதிலடி கொடுக்கப்படும்” என்றார்.
    Next Story
    ×